என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கூடுதல் நுழைவுவாயில் திறப்பு
நீங்கள் தேடியது "கூடுதல் நுழைவுவாயில் திறப்பு"
தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை ஆகிய 3 ரெயில் நிலையங்களில் கூடுதலாக ஒரு நுழைவுவாயில் நேற்று திறக்கப்பட்டது.
சென்னை:
சென்னை சென்டிரல் - விமானநிலையம், விமானநிலையம் - ஏ.ஜி-டி.எம்.எஸ்., ஆலந்தூர்-பரங்கிமலை உள்ளிட்ட பாதைகளில் 26 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியாக ரெயில் போக்குவரத்து நடந்துவருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 60 ஆயிரம் பேர் இதில் பயணித்து வருகின்றனர்.
அதிக பயணிகள் வரும் ரெயில் நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 3 நுழைவுவாயில்கள் செயல்பட்டு வருகிறது. இப்போது சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் வகையில் புதிதாக 4-வது நுழைவுவாயில் நேற்று திறக்கப்பட்டது.
அதேபோல் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 2 நுழைவுவாயில்கள் இருந்தது. தற்போது தேவர் சிலை பகுதியில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் வகையில் 3-வது நுழைவுவாயில் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு 26 பயணிகள் செல்லும் வகையில் 2 லிப்டுகளும் பொருத்தப்பட்டு உள்ளன.
தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 2 நுழைவுவாயில்கள் இருந்தன. தற்போது எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சிக்னல் அருகில் இருந்து வருபவர்களுக்காக 3-வது நுழைவுவாயில் நேற்று திறக்கப்பட்டது. இந்த நுழைவுவாயில்கள் மூலம் பயணிகள் எளிதாக மெட்ரோ ரெயில் நிலையத்தை அடையமுடியும்.
இந்த தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

×

X